Sunday, January 3, 2010

ஹைகூ கவிதைகள்


பிரதிபலிப்பு
தன் உடைகளை சரி செய்கிறாள்!
எதிர் வரும் ஆணை பார்த்து!!
பெண்களின் சாலையோர கண்ணாடி!!!


தாஜ்மஹல்
ஏழைகளின் ரத்தத்தில்!
சிவப்பு அணுக்களை திண்று!!
உருவானது ஒரு வெள்ளை அணு!!!


காதல்
நானும் அவளும்!
இணைந்து இருக்கிறோம்!!
தொடுவானமும் தூரக்கடலும் போல!!!


சீன பெருஞ்சுவர்
மக்களை பிரிக்க, பூமியை துண்டாட!
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு!!
தீட்டப்பட்ட சதி!!!


கொலுசு
கலகலவென சிரிப்பவள்!
இன்று ஓரமாய்...ஊமையாய்!!
காலிழந்ததால்!!!

வியர்வை
உழைக்கும் வர்க்கத்துக்கு!
ரத்தம் அளிக்கும் குளிர்ச்சி-உழைக்காதவர்களுக்கு!!
அது, ரத்தக் கண்ணீர் துளிகள்!!!

பாராட்டு விழா
மலர் தூவும் மழை மேகம்-கைத்தட்டும் இடியோசை!
புகைப்படம் எடுக்கும் மின்னல் ஒளி!!
பூமிக்கு இன்று பாராட்டு விழா!!!

-கே.வி. நிக்சன்.

No comments:

Post a Comment